கோலாலம்பூர், நவ. 13 - முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடின்
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனையில்
காலமானார். அன்னாருக்கு வயது 86 ஆகும்.
சே அப்துல்லா டாயிம் சைனுடின் எனும் இயற்பெயரைக் கொண்ட
டாயிம் சைனுடினின் மறைவை அவரின் வழக்கறிஞர் டத்தோ டாக்டர்
குர்தியால் சிங் நிஜார் உறுதிப்படுத்தினார்.
துன் டாயிம் கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வந்ததாக குர்தியால் சிங் கூறினார்.
துன் டாயிம் கடந்த 1984 முதல் 1991 வரையிலும் 1999 முதல் 2001
வரையிலும் நிதியமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


