புத்ராஜெயா, நவ 12: நாட்டின் வழக்கறிஞர் துறையின் விசாரணை மற்றும் மேல்முறையீட்டுப் பிரிவின் தலைவரான டத்தோ முகமட் டுசுகி மொக்தார் நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் வெளியிட்டார்.
முகமட் டுசுகியின் நியமனம் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களால் மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு (1) பிரிவு 145 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டது என ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
57 வயதான முகமட் டுசுகி, ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டான் ஸ்ரீ அஹ்மட் தெரிருடின் முகமட் சாலேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
முகமட் டுசுகி மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (UIAM) சட்டக் கல்வியில் இளங்கலை பட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என ஷம்சுல் அஸ்ரி தெரிவித்தார்.
மேலும், ஏஜிசியில் சட்ட சேவையில் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
இதற்கிடையில், 6 செப்டம்பர் 2023 முதல் நாட்டின் வழக்கறிஞராகப் பணியாற்றிய அஹ்மட் தெரிருடினின் சேவைக்காக தனது பாராட்டுகளை ஷம்சுல் அஸ்ரி தெரிவித்தார்.
– பெர்னாமா


