NATIONAL

டமான்சாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின

12 நவம்பர் 2024, 9:32 AM
டமான்சாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின

ஷா ஆலம், நவ. 12: இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால்  டமான்சாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுபாங் பெர்டானா பிரிவு U3யைச் சுற்றியுள்ள பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

பந்தாஸ் குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

"சுங்கை டமான்சாராவில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதன் விளைவாக சுபாங் பெர்டானாவின் U3 பகுதி வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. ஆனால், தற்போது சீரற்ற மழைப்பொழிவு காரணமாக நீரின் அளவு குறையத் தொடங்கியது.

இதற்கிடையில், கனமழையால் அப்பகுதிகளில் தண்ணீர் அதிகரித்ததை தொடர்ந்து கவனமாக இருக்க உள்ளூர்வாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

வெள்ளம் காரணமாக அவசர உதவிக்கு 03-55105811 என்ற எண்ணில் பந்தாஸ் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.