கோலாலம்பூர், நவ 11 - அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையின் விளைவுகளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்.) வாயிலாக பொதுப்பணி அமைச்சு மேற்கொண்டு
பொதுப்பணித் துறை தனது பேரிடர் நடவடிக்கை அறையை (பிக்பென்) செயல்படுத்தியுள்ளதோடு இ-டிசாஸ்டர் (eDisaster System) எனும் கைப்பேசி செயலியையும் மேம்படுத்தியுள்ளது.
பிக்பென் மற்றும் ஜே.கே.ஆர். இடிசாஸ்டர் முறையின் ஒருங்கிணைந்த செயல்பாடு பொதுமக்களுக்கு மட்டுமின்றி அனைத்து பங்களிப்பாளர்களும் உதவும் என்று பொணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட அரசு ஏஜென்சிகள் மிகவும் திறனுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிக்பென் என்பது வெள்ளம், நிலச்சரிவு, இடிந்து விழுந்த/சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற பேரிடர்களைக் கையாளும் ஓரிட ஒரு தகவல் மையமாகும். இதில் பொதுப்பணித் துறையின் மேற்பார்வையிலான மாநில மற்றும் கூட்டரசு சாலைகளும் உள்ளடங்கியுள்ளன.
மழைகாலத்தில் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு ஏதுவாக சாலை மூடல் மற்றும் மாற்று வழி தொடர்பானத் தகவல்களை வழங்குவது இந்த பிக்பென் திட்டத்தில் உள்ள நன்மைகளில் அடக்கும்.
பேரிடரின்போது நிலவும் நிலைமையைப் பொறுத்து மூன்று நிலைகளாக இந்த பிக்பென் செயல்பாடு வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது, முன்னறிவிப்பு அமைப்பு நிலை, ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மைய நிலை மற்றும் விரைவான நடவடிக்கை மைய நிலை ஆகியவையே அவையாகும் என அலெக்சாண்டர் குறிப்பிட்டார்.


