NATIONAL

லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் வான் தாக்குதலில 30 பேர் பலி

11 நவம்பர் 2024, 2:34 AM
லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் வான் தாக்குதலில 30 பேர் பலி

கெய்ரோ, நவ. 11- லெபனான் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல்

நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக

லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி டிபிஏ செய்தி நிறுவனம்

தெரிவித்துள்ளது.

பெய்ரூட் நகரின் வட பகுதியிலுள்ள ஆலாமாட் நகரில் அதிகமானோர்

உயிரிழந்ததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நேற்று இஸ்ரேலிய படைகள் வீடொன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஏழு

சிறார்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக லெபான் சுகாதார அமைச்சு

கூறியது.

மேலும், பலரின் உடல்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணும்

பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த மரண எண்ணிக்கை

மேலும் அதிகரிப்பதற்குரிய சாத்தியம் உள்ளது என அது தெரிவித்தது.

இப்போரில் வீடு இழந்த 35 பேர் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக

லெபனானின் அல்-ஜாடீட் தொலைக்காட்சி குறிப்பிட்டது.

மற்றொரு நிலவரத்தில் தென் லெபனானின் சீடோம், அட்லாவுன் நகரிலுள்

சுகாதார மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில்

மூன்று மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

லெபனான் நாட்டின் கிழக்கே உள்ள வெஸ்டர்ன் பீகா பகுதியில் இஸ்ரேல்

நடத்திய விமானத் தாக்குதலில் மேலும் நால்வர் பலியானதாக சுகாதார

அமைச்சு கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.