NATIONAL

சிலாங்கூர் ஜசெக தலைவராக இங் ஸீ ஹான் தேர்வு - கணபதிராவ் துணைத் தலைவரானார்

11 நவம்பர் 2024, 1:55 AM
சிலாங்கூர் ஜசெக தலைவராக இங் ஸீ ஹான் தேர்வு - கணபதிராவ் துணைத் தலைவரானார்

ஷா ஆலம், நவ. 11 - முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான  ஆட்சிக்கு குழு உறுப்பினர்  இங் ஸீ ஹான்  2024-2027 தவணைக்கான சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று இங்குள்ள  ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் கட்சித் தேர்தலின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களிலிருந்து கின்ராரா சட்டமன்ற உறுப்பினரான இங் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த தவைணயின் போது அவர் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ்  துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் உதவித் தலைவர்களாக  செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினரும், ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ இங் சுயி லிம், இயான் யோங் ஹியான் வா ஆகியோர் நியமனம் பெற்றனர்.

இதற்கிடையில் பூச்சோங் நாடுளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் சிலாங்கூர் ஜசெக  செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2024-2027 சிலாங்கூர் ஜசெக நிர்வாகக் குழு உறுப்பினர்கள்  பின்வருமாறு:

தலைவர்: இங் ஸீ ஹான்

துணைத் தலைவர்: வி.கணபதிராவ்

உதவித் தலைவர்கள்: டத்தோ இங் சுயி லிம் மற்றும் இயான் யோங் ஹியன் வா

செயலாளர்: யோ பீ யின்

உதவி செயலாளர்: லியோங் டக் சீ

பொருளாளர்: ஜமாலியா ஜமாலுடின்

உதவி பொருளாளர்: ஆர்.ராஜீவ்

அமைப்புச் செயலாளர்: தியோ வே கெங்

துணை அமைப்புச் செயலாளர்கள்: வி. பாப்பாராய்டு மற்றும் லீ ஃபு ஹாவ்

விளம்பர செயலாளர்: வோங் சியூ கி

அரசியல் கல்வி இயக்குனர்: ஷியெரெட்சான் ஜோஹன்

மாநிலக் குழு உறுப்பினர்கள்: ஓங் சுன் வெய் மற்றும் மைக்கேல் இங் மேய் ஸீ

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.