NATIONAL

1,346 டிங்கி சம்பவங்கள் பதிவு

8 நவம்பர் 2024, 8:00 AM
1,346 டிங்கி சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா, நவ 8 : அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரையிலான 44வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,521) ஒப்பிடும்போது 1,346ஆக குறைந்துள்ளது. அதே சமயம் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 100,936 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்

இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 111,250ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்

ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு மொத்தம் 102 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 78 இறப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

​​மேலும், தொற்றுநோயியல் 44வது வாரத்தில் 27 ஹாட்ஸ்பாட் இடங்கள்

பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

அதாவது சிலாங்கூரில் 14 இடங்களும், நெகிரி செம்பிலான், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் தலா 4 இடங்களும், பேராக்கில் 2 இடங்களும், சபா, பினாங்கு மற்றும் கிளந்தானில் தலா ஓர் இடமும் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.