NATIONAL

சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவராக நோர்ஹிஷாம் நியமனம்

8 நவம்பர் 2024, 7:05 AM
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவராக நோர்ஹிஷாம் நியமனம்

சிப்பாங், நவ. 8 - சிலாங்கூர் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் தரவு/ஆய்வுப் பணி அதிகாரி ஏசிபி நோர்ஹிஷாம் பஹாமன் சிப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று அமலுக்கு வருகிறது.

நோர்ஹிஷாம் மற்றும் சிப்பாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷான் கோபால் கிருஷ்ணன் ஆகியோருக்கு இடையிலான பதவி ஏற்பு மற்றும் ஒப்படைப்பு நிகழ்வு இன்று சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலாவில் பிறந்தவரான 52 வயதான நோர்ஹிஷாம், 29 ஆண்டுகள் அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.