NATIONAL

ஐ-சீட் திட்டத்திற்கு 144 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிப்பு - ஆண்டு இறுதிக்குள் உபகரணங்கள் விநியோகிக்கப்படும்

8 நவம்பர் 2024, 6:35 AM
ஐ-சீட் திட்டத்திற்கு 144 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிப்பு - ஆண்டு இறுதிக்குள் உபகரணங்கள் விநியோகிக்கப்படும்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், நவ 8 - குறைந்த வருமானம் பெறும் வணிகர்களுக்கு வர்த்தக

உபகரண உதவியை வழங்கும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும்

தொழில் முனைவோர் திட்டத்திற்கு (ஐ-சீட்) இவ்வாண்டு 144 பேரின்

விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு இவ்வாண்டு மொத்தம் 183 விண்ணப்பங்கள் கிடைக்கப்

பெற்ற வேளையில் அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி

செய்த 144 பேரின் விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டதாக ஐ-சீட் தலைமை

ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி கூறினார்.

கிள்ளான் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு

கடந்த மாதம் கிள்ளானில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பின் போது

வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்ட வேளையில் அடுத்தக் கட்டமாக

கோல சிலாங்கூரில் உபகரண ஒப்படைப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதர மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர்

மாதத்திற்குள் உபகரணங்களை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில்

நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என அவர் சொன்னார்.

அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உபகணங்களை ஒப்படைக்கும்

பணியை யுபென் எனப்படும் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல்

பிரிவு கோ ஹிஜ்ரா கூட்டுறவுக் கழகம் வாயிலாக மேற்கொண்டு

வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு

உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஐ-சீட்

பங்கேற்பாளர்களுக்கான விளக்கமளிப்பு மற்றும் உறுதிக் கடிதம்

கையெழுத்திடும் நிகழ்வுக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஐ-சீட் திட்டம் ஏற்கனவே முழு நேரமாக வியாபாரத்தில்

ஈடுபட்டுள்ளவர்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு உதவும்

நோக்கில் அமல் செய்யப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாதவன், இது

இலவச உபகரணங் திட்டமாக இருந்தாலும் விண்ணப்பத்தின்

அடிப்படையில் மூலதன நிதியாக 50 முதல் 70 விழுக்காட்டு வரையிலான

தொகையை வழங்க முயன்று வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான

மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தி ஐ-சீட் திட்டத்திற்கு கூடுதல்

மானியம் கிடைக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மாதவன்

குறிப்பிட்டார்.

முன்பு ஐ-சீட் மற்றும் சித்தம் என இரு வர்த்தக உபகரண உதவித்

திட்டங்கள் இந்திய சமூகத்திற்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால்,

தற்போது ஐ.சீட் திட்டம் மட்டுமே இந்திய சிறு தொழில்முனைவோரின்

ஒரு நம்பிக்கையாக உள்ளது. ஆகவே, இத்திட்டத்தை விரிவாக்குவதற்கு

கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.