NATIONAL

இணைய முதலீடு மோசடியில் தொடர்புடைய 14 பேர் கைது

8 நவம்பர் 2024, 5:57 AM
இணைய முதலீடு மோசடியில் தொடர்புடைய 14 பேர் கைது

ஷா ஆலம், நவ 8: கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உலு கிளாங், அம்பாங்கில் இணைய

முதலீட்டு மோசடி திட்டத்தின் கால் சென்டர் என நம்பப்படும் வீட்டில் காவல்துறையினர்

சோதனை நடத்தினர்.

அன்று இரவு 9.30 மணியளவில் நடந்த சோதனையில், 14 வெளிநாட்டவர்கள் கைது

செய்யப்பட்டதாகவும்,மோசடி நடவடிக்கைக்குப் பயன்படுத்தப் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சிலாங்கூர் துணைக் காவல் துறைத் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி கூறினார்.

“பல்வேறு பிராண்டுகளின் 151 கைப்பேசிகள் , மூன்று மடிக்கணினிகள், ஒரு மோடம், ஒரு

ஐபேட் ப்ரோ, சொகுசு கடிகாரங்கள் மற்றும் 15 வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

செய்யப்பட்டன.

“கைது செய்யப்பட்ட அனைவரும் இணைய முதலீட்டு மோசடி திட்டம் தொடர்பாக

வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக செயல்படுவதாக காவல்துறையினர் நம்புகிறார்கள்,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

 

ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63

இன் கீழ் மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 420 மற்றும் 120B மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன்

பிரிவு 6(1)(c) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.