NATIONAL

1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை காணவில்லை

7 நவம்பர் 2024, 3:06 AM
1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை காணவில்லை

கோலாலம்பூர், நவ. 7: நேற்று மதியம் அம்பாங்கில் உள்ள ஒரு ஷோப்பிங் சென்டரிலிருந்து 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

 இந்தச் சம்பவம் தொடர்பாக பிற்பகல் 3.55 மணிக்கு தனது தரப்புக்கு புகார் கிடைத்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார். குறிப்பிட்ட பகுதியின் அருகிலுள்ள ஒரு வங்கியிலிருந்து பாதுகாப்பு நிறுவனத்தால் வசூல் செயல்முறை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இசம்பவம் நிகழ்ந்துள்ளது.

“அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டம் பிரிவு 379 இன் கீழ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு வேனின் ஓட்டுநர் பணம் அடங்கிய பை காணமல் போயிருப்பதை உணர்ந்த பின்னர், இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.