NATIONAL

இரண்டு பலகை மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் தீயில் எரிந்து நாசமாகின

6 நவம்பர் 2024, 6:51 AM
இரண்டு பலகை மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் தீயில் எரிந்து நாசமாகின

கோலாலம்பூர், நவ. 6: இன்று அதிகாலை ஜாலான் வெல்ஃபேர், கம்போங் பாரு சீனா சுங்கை பூலோவில் உள்ள இரண்டு பலகை மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு காலை 6.36 மணிக்கு அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) சிலாங்கூர்  செயல் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர்அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

"சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுதோங், செலாயாங் மற்றும் ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) 29 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

"இரண்டு தொழிற்சாலைகளும் 60 சதவிகிதம் எரிந்து விட்டதாக," அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.