NATIONAL

துருக்கியின் மிகப்பெரிய ராணுவ ‘’அமைப்பு மேம்பாட்டாளர் ஹவல்சனுடன் ‘’ ட்ரோன் தொழில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

6 நவம்பர் 2024, 6:07 AM
துருக்கியின் மிகப்பெரிய ராணுவ ‘’அமைப்பு மேம்பாட்டாளர் ஹவல்சனுடன் ‘’ ட்ரோன் தொழில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஷா ஆலம், நவ 6: கடந்த மாதம், சிலாங்கூர் ஏவியேஷன் மற்றும் டெக்னாலஜி இன்னோவேஷன்ஸ் (Selati) மூலம் மாநில அரசு  துருக்கியின் மிகப்பெரிய ராணுவ அமைப்பு மேம் பாட்டாளரான ஹவல்சனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ட்ரோன் தொழில்துறையின் மேம்படுத்துவதற்காக துருக்கியில் நடைபெறும் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காட்சியான ``Saha Expo`` முன்னிட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என புத்தாக்க மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் டாக்டர் பாஹ்மி ஙா கூறினார்

சிலாங்கூரை ஒரு பெரிய விண்வெளி மையமாக மாற்றுவதற்கான  முயற்சிகளில் துருக்கியின் விண்வெளித் துறையின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"கூடுதலாக, கோலா சிலாங்கூரில் உள்ள பெஸ்தாரி ஜெயாவில் ட்ரோன் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மேம்பாடு மூலம் மாநிலத்தில் ட்ரோன் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

சிலாங்கூர் தூதுக்குழு  ராணுவ ஆயுத தயாரிப்பு புதிய தொழில் நுட்பங்களில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் ட்ரோன் அமைப்புகளை கண்டறியவும் நேரம் எடுத்துக்கொள்ளும்  என்று ஃபஹ்மி மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.