NATIONAL

நீடித்த மேம்பாட்டு அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்த முதல் மாநிலம் சிலாங்கூர்

6 நவம்பர் 2024, 4:56 AM
நீடித்த மேம்பாட்டு அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்த முதல் மாநிலம் சிலாங்கூர்

கெய்ரோ, நவ. 6 - நீடித்த மேம்பாட்டு இலக்கு (எஸ்.டி.ஜி.)அறிக்கையை

ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) சமர்ப்பித்த மலேசியாவின் முதல்

மாநிலம் என்ற முறையில் சிலாங்கூர் வரலாறு படைத்துள்ளது.

பிளான்மலேசியா சிலாங்கூரினால் கடந்த 2022ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட

தன்னார்வ துணை மதிப்பாய்வு (வி.எஸ்.ஆர்.) அல்லது எஸ்.டி.ஜி. அறிக்கை

கடந்தாண்டு ஐ.நா,விடம் சமர்ப்பிக்கப்பட்டது என்று மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் ஆறு ஊராட்சி மன்றங்களும் தங்களின் தன்னார்வ உள்

மதிப்பாய்வு அறிக்கையைத் சமர்ப்பித்ததாக அவர் சொன்னார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் அரச

மாநகர் மன்றம், சிப்பாங் நகராண்மைக் கழகம், அம்பாங் ஜெயா

நகராண்மைக் கழகம், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஆகியவையே

அந்த மதிப்பாய்வு அறிக்கையைச் சமர்பித்த ஆறு ஊராட்சி மன்றங்களாகும்

என்றார் அவர்.

மாநில அரசின் அனைத்து இலாகாக்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கு

இந்த சந்தர்ப்பத்தில் நான் வாழ்த்து கூற விரும்புகிறேன்.

அனைத்து பகுதிகளிலும் அனைத்து வடிவங்களிலும் நீடித்த வளர்ச்சியை

உறுதி செய்வதில் அவை முழு ஈடுபாட்டை தொடர்ச்சியாக காட்டி

வந்துள்ளன என்று அவர் சொன்னார்.

எகிப்து அனைத்துலக கண்காட்சி மையத்தில் உள்ள பெவிலியன்

சிலாங்கூரில் 12வது அனைத்துலக நகர ஆய்வரங்கை முன்னிட்டு

நிகழ்த்திய உரையில் அமிருடின் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக, வி.எஸ்.ஆர். மற்றும் வி,எல்.ஆர். திட்டங்களை அவர் தொடக்கி வைத்ததோடு மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்கள் மற்றும் சில அரசு நிறுவனங்கள் சிலாங்கூர் பெவிலியனில் அமைந்துள்ள கண்காட்சிக் கூடங்களையும் பார்வையிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.