NATIONAL

கெந்திங் ஹைலண்டஸ் கெஸினோவில் கைகலப்பு- நால்வர் மீது குற்றச்சாட்டு

6 நவம்பர் 2024, 3:52 AM
கெந்திங் ஹைலண்டஸ் கெஸினோவில் கைகலப்பு- நால்வர் மீது குற்றச்சாட்டு

குவாந்தான், நவ. 6 - கடந்த மாதம்  23ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தப்பட்ட நாலவர் மீது நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்டது.

மாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த கைகலப்பில்  ஏழு உள்ளூர் ஆடவர்களும் ஒரு வெளிநாட்டவரும் சம்பந்தபட்டதாக பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சைஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

கைதான அனைவரும் 39 மற்றும் 70 வயதுடையவர்களாவர்.  சந்தேக நபர்களில் மூவர் வன்முறை மற்றும் சொத்து தொடர்பான முந்தையக் குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளர் என்று அவர் சொன்னார்.

இந்த கைகலப்பு  தொடர்பில் அன்றைய தினம்  மாலை 5.55 மணிக்கு எங்களுக்கு புகார் வந்தது. சந்தேக நபர்களில் ஒருவர் செலுத்த வேண்டிய 100 வெள்ளி கேஸினோ சிப் காப்புறுதி தொடர்பான வாக்குவாதமே இந்த சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த கைகலப்பில் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக சில சந்தேக நபர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

மூன்று சந்தேகநபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்  147 பிரிவின் கீழ்  குற்றம் சாட்டப்பட்டது. மற்றவர்கள்  பகாங் துணை அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் இதன் தொடர்பான ஊகங்களை வெளியிடுவதைத்   தவிர்க்குமாறு சைஹாம் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஒரு கேஸினோவில் பலர் சண்டையிடுவதைக் காட்டும் 52 வினாடிகள் கொண்ட வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.