NATIONAL

டோல் சாவடியின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் இருவர் மரணம்- சுங்கை பீசியில் சம்பவம்

5 நவம்பர் 2024, 4:31 AM
டோல் சாவடியின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் இருவர் மரணம்- சுங்கை பீசியில் சம்பவம்

கோலாலம்பூர், நவ. 5- டோல் சாவடியில் தடங்களுக்கு மத்தியிலுள்ள தடுப்புச் சுவரை கார் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் சுங்கை பீசி டோல் சாவடியில் சிரம்பான் நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.

அந்த காரிலிருந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.42 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய எழுவர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

ஹோண்டா சிஆர்வி காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த அவ்விரு ஆடவர்களின் உடல்களையும் தாங்கள் மீட்டதாக தெரிவித்த அவர். மேல் நடவடிக்கைக்காக அவ்வுடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.