NATIONAL

அம்பாங், சுங்கை பூலோ, கோல சிலாங்கூரில் அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் அதிகரிப்பு - சிலாங்கூர் போலீஸ் விசாரணை

4 நவம்பர் 2024, 9:26 AM
அம்பாங், சுங்கை பூலோ, கோல சிலாங்கூரில் அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் அதிகரிப்பு - சிலாங்கூர் போலீஸ் விசாரணை

கோல லங்காட், நவ. 5 - பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழும் அளவுக்கு அம்பாங், கோல சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோவில் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை பெருகி வருவது தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட மூன்று இடங்களோடு மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அந்நிய நாட்டினரின் குடியேற்றம் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்யவும் பொது அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கவும் தாங்கள் மலேசிய குடிநுழைவுத் துறையிடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

சந்தேகத்திற்குரிய அந்நிய நாட்டினர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடங்களில் சோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விவாகரத்தில் நாங்கள் குடிநுழைவுத் துறையிடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட இடங்களில சில அதிரடிச் சோதனைகள் நடத்தப்படும் என்றார் அவர்.

இன்று இங்கு கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவரின் பதவி ஒப்படைப்பு மற்றும் ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் குடியிருப்பு பகுதியில் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அம்பாங், பாண்டான் மேவா குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்தது தொடர்பில் டத்தோ ஹூசேன் இவ்வாறு கருத்துரைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.