NATIONAL

பண்டான் இண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் சேதம் ஏற்படவில்லை

4 நவம்பர் 2024, 8:52 AM
பண்டான் இண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் சேதம் ஏற்படவில்லை

கோலாலம்பூர், நவ. 4 - இன்று அதிகாலை பண்டான் இண்டாவில் உள்ள லெம்பா

மஜூ என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் விளைவாக புரோட்டான் சாகா கார்

ஒன்று இடிபாடுகளில் சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அதிகாலை 4.35 மணிக்கு தெரிவிக்கப்பட்டது

மற்றும் இது ஒரு பெரிய கால்வாய் அருகில் உள்ள பொது வாகன நிறுத்துமிடத்தில்

நடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம்

இஸ்மாயில் கூறினார்.

``இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு புரோட்டான் சாகா கார் இடிபாடுகளில்

சிக்கியது மற்றும் இச்சம்பவம் குறித்து வாகன உரிமையாளருக்கு

தெரிவிக்கப்பட்டுள்ளது,`` என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த வாகனத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு அதிகாரிகள் நிபுணரின் பகுப்பாய்விற்கு

காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, அதிகாரிகள் காரை மீட்கும் முயற்சியில்

ஈடுபட்டுள்ளனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.