NATIONAL

சிலாங்கூர் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் அவசியம்

4 நவம்பர் 2024, 5:53 AM
சிலாங்கூர் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் அவசியம்

ஷா ஆலம், நவ 4: சிலாங்கூர் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.

எனவே, மக்களின் நல்வாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்வதை உறுதி செய்வதற்காக அடுத்த ஆண்டு முழுவதும் இதுபோன்ற  நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் திட்டமிட்டுள்ளார்.

"சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் ஒற்றுமைக் குழு உறுப்பினர்களுக்கு அதிக ஒதுக்கீடு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புகிறோம்.

"சிலாங்கூர் பல இன மக்களைக் கொண்டுள்ளது. இதனால் மினி மலேசியாவாக மாறுகிறது. இது இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை உருவாக்கும் முயற்சியாகும்.

“இனம், மதம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் மலேசியா அமைதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று டத்தோ ரிசாம் இஸ்மாயில் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நவம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.