NATIONAL

2025இல்  ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் மலேசியாவுக்கு ஜப்பான் ஆதரவு

31 அக்டோபர் 2024, 4:43 AM
2025இல்  ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் மலேசியாவுக்கு ஜப்பான் ஆதரவு

கோலாலம்பூர், அக். 31 - வரும்  2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை ஏற்கவிருக்கும்  மலேசியாவுக்கு ஜப்பான் தனது ஆதரவை உறுதியளித்துள்ளது. இது பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான தனது  உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டியுள்ளது.

மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா ஆகியோருக்கு இடையே நேற்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.

இரு தரப்பு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

வரும் 2025 ஆம் ஆண்டில்  ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் மலேசியாவுக்கு ஜப்பானின் ஆதரவை வெளியுறவு அமைச்சர் இவாயா மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று அமைச்சு நேற்று முகநூல் பதிவில் அமைச்சு கூறியது.

ஆசியான் விஷயங்களுக்கு அப்பால், மலேசியா மற்றும் ஜப்பான் இடையே, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் கிழக்கை நோக்கும் கொள்கை ஆகிய அம்சங்களில்  விரிவான விவேக பங்காளித்துவத்தை  வலுப்படுத்தும் தங்களின் நிலைப்பாட்டு  இரு தரப்பினரும்  மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.