NATIONAL

பேரரசர் தம்பதியரின் தீபாவளி வாழ்த்து

31 அக்டோபர் 2024, 1:52 AM
பேரரசர் தம்பதியரின் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், அக். 31- இந்நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும்

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா

ஷரித் சோபியா தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்

கொண்டனர்.

சுல்தான் இப்ராஹிமின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு

ஒன்றில் பேரரசர் தம்பதியரின் இந்த வாழ்த்துச் செய்தி இடம்

பெற்றுள்ளனர்.

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, சுபிட்சம் மற்றும் செழிப்பை இந்த

தீபத்திருநாள் தரும் என எதிர்பார்ப்போம். உங்களின்

நேசத்திற்குரியவர்களுடன் தீபத்திருநாளைக் கொண்டாடுங்கள் என அந்த

வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை இந்துக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.