ஷா ஆலம், அக் 29: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) இயக்கப்படும் எஹ்சான் மார்ட் பல்பொருள் அங்காடி, டத்தாரான் செலாயாங், கோம்பாக்கில் திறக்கப்பட்டது.
இங்கு பல்வேறு அன்றாட தேவைக்கான பொருட்களை விற்பனை செய்வதோடு, வார இறுதி நாட்களில் எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையையும் நடத்தப்படுகிறது என தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
"ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படும் மலிவு விற்பனை உட்பட வாடிக்கையாளர்களுக்கு இங்கு பொருட்களை வாங்குவது வசதியாக இருக்கும், காரணம் அதிக இடவசதி உள்ளது.
"இந்த அக்டோபர் மாதம் முழுவதும், மலிவு விற்பனை எட்டு முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் இரண்டு மணி நேரத்திற்குள், காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது," என்று டத்தோ வீரா டாக்டர் முகமட் கைரி முகமட் ராசி கூறினார்.
இதற்கிடையில், 2022 முதல் ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனை வழக்கம் போல் தொடரும் என்று அவர் விளக்கினார்.
"இதுவரை நாங்கள் அட்டவணைப்படி ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறோம். மேலும் குடியிருப்பாளர்களும் மலிவு விற்பனையை அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.


