கோம்பாக், அக் 29: விளையாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் மின்னணு விளையாட்டுகளுக்காக (இ-ஸ்போர்ட்ஸ்) ஓர்
அரங்கத்தை உருவாக்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.
எனவே, அதை நிறைவேற்ற அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்பட மாநில அரசு தயாராக உள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"வாய்ப்பிருந்தால் இந்த பட்ஜெட்டில் அதை செய்லபடுத்த முயற்சிப்பேன்.மேலும், சைபர் கேம்ஸ் அரங்கத்தை உருவாக்குவதற்கான இடத்தைக் கண்டுபிடிப்போம்.
"ஏற்கனவே, இந்த விளையாட்டிற்கு உலக சாம்பியன்கள் உள்ளனர்.மின்னணு விளையாட்டுகளுக்காக நாங்கள் சுக்மாவில் பதக்கங்களையும் மற்ற போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளோம், ஆனால்,அவ்விளையாட்டிற்கு இன்னும் சிறப்பு இடம் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம், மின்னணு விளையாட்டு துறையை ஒரு தொழில்முறை தொழிலாக மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.
"மேலும் இவ்விளையாட்டிற்கு பயிற்சி, ஸ்பான்சர்ஷிப், தொழில்முறை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம், நாம் மின்னணு விளையாட்டை மேம்படுத்த முடியும்.


