ஷா ஆலம், அக் 29: மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடிமக்கள் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இல்திசம் சிலாங்கூர் சிஹாட் (ISS) திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் RM10,000 வரையிலான கவரேஜுடன் செயலில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சலுகை வழங்கப்படும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த திட்டம் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அல்லாத சிகிச்சைகளும், அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சையும் உள்ளடக்கியது என அவர் விளக்கினார்.
"ஒவ்வொரு நபரும், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் சிறந்த சுகாதார சேவையை அணுகுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் அரசாங்கத்தின் அக்கறையின் வெளிப்பாடே இந்த திட்டம்" என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
அடிப்படை சிகிச்சைகளுக்காக தனிநபர்களுக்கு வருடத்திற்கு RM250 பதிவுசெய்யப்பட்ட தனியார் கிளினிக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது உட்பட குடும்பங்களுக்கு வருடத்திற்கு RM500 என இந்த திட்டம் வழங்குகிறது என்று ஜமாலியா கூறினார்.
இறப்பு மற்றும் தீவிர நோய் பாதுகாப்பிற்கு RM5,000 என நோய் பாதுகாப்பு சலுகைகள் வழங்குவதன் மூலம் ISS விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்திற்கு செலங்கா செயலி மூலமாகவோ அல்லது அடையாள அட்டைகள் மற்றும் சம்பள சீட்டுகள் போன்ற ஆவணங்களை அருகிலுள்ள தொகுதி அலுவலகத்திற்கு அனுப்புவதன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், 24 மணிநேரமும் செயல்படும் 1800-22-6600 தொலைப்பேசி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது கூடுதல் தகவல்களூக்கு www.iltizamselangorsihat.com என்ற இணையதளத்தை நாடவும்.
இவ்வாண்டு இத்திட்டத்தை செயல்படுத்த சிலாங்கூர் RM35 மில்லியனை ஒதுக்கியது, தனிநபர் மற்றும் குடும்பப் பிரிவினருக்கான பலன்களைப் பெற 100,000 உறுப்பினர்களை இலக்காகக் கொண்டது.


