NATIONAL

ஏழு மாவட்டங்களில் நடைபெற்ற ஜோப்கேர் கார்னிவலில் 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

29 அக்டோபர் 2024, 7:30 AM
ஏழு மாவட்டங்களில் நடைபெற்ற ஜோப்கேர் கார்னிவலில் 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

ஷா ஆலாம், அக். 29: ஏழு மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜோப்கேர் கார்னிவலில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றுள்ளனர் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவர்களில் ஏறக்குறைய 6,000 பேருக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"அந்த எண்ணிக்கையில், 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு குடியிருப்பாளர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது மட்டுமல்லாமல், சிலாங்கூரை மக்கள் வாழ தகுந்த மாநிலமாக மாற்றுகிறது.

"யாராக இருந்தாலும் சமமான வசதிகள் மற்றும் அணுகல் இருக்கும். வேலைகள் மட்டுமின்றி, கல்வி மற்றும் நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில்,சிப்பாங்கில் (நவம்பர் 16) மற்றும் சபாக் பெர்ணமில் (டிசம்பர் 14) ஆகிய தேதிகளில் சுமார் 8,000 வேலை வாய்ப்புகள் வழங்கும் ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித வள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.