NATIONAL

ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கும் காலம் தொடர்பான சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்படும்

29 அக்டோபர் 2024, 7:18 AM
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கும் காலம் தொடர்பான சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்படும்

ஷா ஆலம், அக் 29: ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கும் காலம் தொடர்பான சிக்கல்களைப் பற்றி விவாதிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உடனான அமர்வை சிலாங்கூர் நடத்தும்.

ஹோட்டல் உரிமையாளர்கள் சிறந்த சேவையை வழங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருப்பதையும் உறுதிசெய்ய அவரது தரப்பு அனைவருக்கும் சாதகமான தீர்வைக் கண்டுபிடிக்கும் என்று சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

23 மணி நேர தங்கும் காலத்தை அமல்படுத்த சிலாங்கூர் திட்டமிடவில்லை, மாறாக ஹோட்டலின் செக்-இன் மற்றும் செக்-அவுட் நேரம் வழக்கம் போல் இருக்கும் என டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

"நாங்கள் அனைவருக்கும் சாதகமான தீர்வைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம், ஆனால், அதே நேரத்தில் நாங்கள் ஹோட்டல் உரிமையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது, ஏனெனில் இது சுற்றுலாத் துறையை பாதிக்கும்," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த வாரம், பயனர்கள் குறைந்தது 23 மணிநேரம் தங்குவதை உறுதிசெய்ய, செக்-இன் மற்றும் செக்-அவுட் நேரங்களை சரிசெய்யுமாறு ஹோட்டல் உரிமையாளர்களை சுற்றுலா அமைச்சகம் வலியுறுத்தியது.

ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்குவது பொதுவாக வெளிநாடுகளில் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் மதியம் 2 மணிக்கு செக்-இன் செய்து மறுநாள் மதியம் செக் அவுட் செய்வார்கள் என்றும் அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

இதற்கிடையில், 23 மணிநேரம் தங்கியிருப்பது, தொழிலாளருக்கு பிரச்சனைகளாக இருப்பதை தவிர, அடுத்த வாடிக்கையாளர் செக்-இன் செய்வதற்கு முன்பு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஒரு தடையாக இருப்பதாக சுய் லிம் கருதுகிறார்.

முன்னதாக, சில ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் தங்கும் விடுதிகளில் செக்-இன் நேரத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி காலை 11 மணிக்கு செக்-அவுட் இருந்தது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

வாடிக்கையாளர்கள் தாமதமாக செக் அவுட் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உட்பட, தங்கும் காலம் குறைவாக இருந்ததால் இது நியாயமற்றது என்று கருதிய நெட்டிசன்கள் மத்தியில் இந்த நடவடிக்கை விவாதத்தைத் தூண்டியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.