ALAM SEKITAR & CUACA

நண்பகல் 12 மணி வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

29 அக்டோபர் 2024, 1:53 AM
நண்பகல் 12 மணி வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், அக் 29 – இன்று நண்பகல் 12 மணி வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

பெர்லிஸ் , கெடா, பினாங்கு, பேராக் ( கிரியான், லாருட், மத்தாங், செலாமா, உலு பேராக், கோலா கங்சார், மஞ்சோங் , பகான் டத்தோ, ஹிலிர் பேராக்) மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதே வானிலைதான் கிளந்தான் (தும்பாட், பாசிர் மாஸ், ஜெலி, தானா மேரா), நெகிரி செம்பிலான் (போர்ட்டிக்சன்) மற்றும் சராவக்கிலும் நிலவும் என தெரிவிக்கப்பட்டது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு  குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம்,  சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.