NATIONAL

உயர்கல்வி  மாணவர்களுக்கான RM100 புத்தக வவுச்சர் திட்டம் மூலம் ஒரு மில்லியன் மாணவர்கள் பயன்

28 அக்டோபர் 2024, 9:54 AM
உயர்கல்வி  மாணவர்களுக்கான RM100 புத்தக வவுச்சர் திட்டம் மூலம் ஒரு மில்லியன் மாணவர்கள் பயன்

புத்ராஜெயா,அக் 28: உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கான RM100 புத்தக வவுச்சர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அக்டோபர் 30 முதல் டிசம்பர் 31 வரை செயல்படுத்துவதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் கீழ் பதிவு செய்யப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும்  மாணவர்களுக்கு டிஜிட்டல் தளம் மூலம் வவுச்சர்கள் விநியோகம் செய்யப்படும் என்று உயர்கல்வி அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 30 முதல் https:/mysiswaplace.my என்ற இணைப்பில் உள்ள MySISWAPLACE போர்ட்டலில் தகுதிச் சரி பார்ப்புக்குப் பிறகு வவுச்சர் கோட் உருவாக்கப்படும்.

இந்த போர்ட்டலில் உருவாக்கப்படும் வவுச்சர், MySISWAPLACE போர்ட்டலில் புத்தகங்களை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு நபரும் RM 100 மதிப்பிலான வவுச்சரை ரிடீம் செய்ய தகுதியுடையவர் என்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளை உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துட் காடிர் அவர்களால் MySISWAPLACE தளம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படும்.

MySISWAPLACE மாணவர்களுக்குத் தேவையான குறிப்புப் பொருட்களை எப்போதும் வைத்திருப்பதை உறுதிசெய்யவும், கற்றல் செயல் திறனை அதிகரிக்கும் மற்றும் சிரமங்களைக் குறைக்கவும், வெளிப்படையான அமைப்புடன் கூடிய இணைய தளத்தின் மூலம் வாசிப்புப் பொருட்களை எளிதாகவும் விரைவாகவும் அணுக மாணவர்களுக்கு உதவுகிறது.

இந்த திட்டம் அறிவு மற்றும் புத்தகங்களை நேசிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க உதவும் என்று உயர்கல்வி அமைச்சகம் நம்புகிறது. இதன் மூலம் உயர்கல்வி நிறுவன மாணவர்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த முடியும்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.