ஷா ஆலம், அக்.28: சுபாங் ஜெயா மாநகராட்சி தனது நிர்வாகத்தைச் சுற்றியுள்ள 18 இடங்களில் வடகிழக்கு பருவமழையின் மாற்றத்திற்கான முன் ஏற்பாடாக விழும் ஆபத்தில் உள்ள மரங்களை பராமரித்து வருகிறது.
மரங்கள் விழும் அபாயத்தைக் குறைப்பதற்கும், குடியிருப்பாளர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுபாங் ஜெயா மேயர் டத்தோ அமிருல் அசிசான் அப்துட் ரஹீம் கூறினார்.
இதில் சம்பந்தப்பட்ட இடங்கள் சுபாங் ஜெயா, பூச்சோங், கின்றாரா மற்றும் ஶ்ரீ கெம்பாங்கன் ஆகியவை ஆகும். இந்த பராமரிப்பு நடவடிக்கைக்கு நான்கு மாதங்கள் ஆகும் என்று அவர் விளக்கினார்.
"இந்த பராமரிப்பு பணியில் மர கிளைகளை கத்தரிப்பது, கட்டமைப்பு மதிப்பீடு மற்றும் மரங்களை வெட்டுவது ஆகியவை அடங்கும்" என்று அவர் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.
அதே நேரத்தில்,பராமரிப்புப் பணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து பிபிடி தொடர்ந்து கண்காணிக்கும் என்று அமிருல் அசிசான் கூறினார்.
திடீர் வெள்ளம், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் நிலையற்ற கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் வழியாக சாலையைப் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


