கோலாலம்பூர், அக்.28: தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பயனாளிகள் அக்டோபர் அக்டோபர் 29,30 தேதிகளில் டோல் கட்டண விலக்களிப்பு அனுபவிக்கலாம்.
நாளை நள்ளிரவு 12.01 மணி முதல் புதன்கிழமை இரவு 11.59 மணி வரை அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டண விலக்களிப்பு அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேசிய எல்லையில் உள்ள பங்குனன் சுல்தான் இஸ்கண்டார் (பிஎஸ்ஐ) வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளாஸ்), டோல் தஞ்சோங் குபாங் மற்றும் மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது லைன் எக்ஸ்பிரஸ்வே (LINKEDUA) ஜோகூர் டாருல் தக்சிம் சாலைகளை தவிர அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வகுப்பு 1 வாகனங்களுக்கு (தனியார் வாகனங்கள்) மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
"RM38 மில்லியன் மதிப்பீட்டில் கட்டண விலக்களிப்புக்கான செலவு, சம்பந்தப்பட்ட அனைத்து சுங்கச் சலுகை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு அரசாங்கத்தால் ஈடு செய்யப்படும்.
"இந்த சலுகை மடாணி மலேசிய அரசாங்கத்தின் முக்கிய கொள்கைக்கு ஏற்ப உள்ளது. அதாவது இது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும். அதே நேரத்தில் இந்த நாட்டில் பல இன சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது.
நெடுஞ்சாலை பயனர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பயணங்களைத் திட்டமிடலாம் என்று நந்தா தெரிவித்தார்.
"பொதுப்பணி அமைச்சகம், மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் அனைத்து நெடுஞ்சாலை சலுகை நிறுவனங்களையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தி சாலையைப் பயன்படுத்துபவர்கள் கவனமாகவும், விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
" நமது நெடுஞ்சாலைகளை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், வசதியாகவும் மற்றும் சாலை விபத்து புள்ளி விவரங்களைக் குறைக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


