ஷா ஆலம்,அக் 28: மலேசியா புத்ரா பல்கலைக்கழகம்(UPM) சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா கலாச்சார மற்றும் கலை மையத்தில் ஏற்பாடு செய்திருந்த முன்னாள் மாணவர்களுடனான இரவு விருந்தில் சிலாங்கூர் மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் கலந்து கொண்டார்.
12வது முறையாக நடைபெறும் இந்நிகழ்வில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வருகையை UPM துணைவேந்தர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அஹ்மட் ஃபர்ஹான் முகமட் சாதுல்லா வரவேற்றார்.
"மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தின் மொத்தம் 500 முன்னாள் மாணவர்கள் ``Sirih Pulang ke Gagang@Homecoming``இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் பாராட்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சேவை விருது உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.


