NATIONAL

காணாமல் போன பானுப்ரியா பாலமுருகனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை

28 அக்டோபர் 2024, 3:56 AM
காணாமல் போன பானுப்ரியா பாலமுருகனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை

கோலாலம்பூர்,அக் 28: கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் சிலாங்கூரில் உள்ள ஏயோன் பிக் சுபாங் ஜெயா, ஜாலான் கெமாஜுவான் சுபாங்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் 15 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொது மக்களின் உதவியைக் கோருகிறது.

பானுப்ரியா பாலமுருகன் காணாமல் போன புகார் அன்றைய தினம் மாலை 5.32 மணிக்கு

கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான்

மாமட் கூறினார்.

அந்த பெண் 168 சென்டிமீட்டர் உயரமும், பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட தலைமுடியுடன் 55 கிலோ எடையும் கொண்டவர் என அவர் கூறினார்.

பாதிக்கப் பட்டவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு

வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை

தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-78627222 அல்லது 03-78627100 என்ற

எண்ணில் அழைக்கலாம்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.