வெப்ப வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை
(மெட் மலேசியா) வெளியிட்டுள்ளது.
அவை பேராக்கில் (லாருட்,மத்தாங்,கோலா கங்சார்) சிலாங்கூரில் (கோம்பாக்,
பெட்டாலிங்) புத்ராஜெயா மற்றும் பகாங்கில் (மாரான், தெமெர்லோ) ஆகிய
இடங்கள் ஆகும்.
அப்பகுதிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35
முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி வானிலை குறித்த சமீபத்திய தகவலுக்கு, பொதுமக்கள்
https://www.met.gov.my/iklim/
இணையதளத்தைப் பார்வையிடலாம்.
– பெர்னாமா


