வீரர்களுக்கான RM230 மில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீடு, விளையாட்டு துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.
இந்த ஆண்டு அதிகரித்த ஒதுக்கீடு தேசிய விளையாட்டு துறையை
வலுப்படுத்துவதில் ஒற்றுமை அரசாங்கத்தின் அக்கறையின் சான்றாகும் என தேசிய ஹாக்கி ஜாம்பவான் டத்தோ மிர்னாவன் நவாவி கூறினார்.
இந்த நாட்டில் விளையாட்டுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது, என்று அவர் தெரிவித்தார்.
போடியம் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தீவிர பயிற்சி மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் உட்பட நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
மின்-விளையாட்டை வலுப்படுத்தவும் அதன் அரங்கை மேம்படுத்தவும் அரசாங்கம் RM20 மில்லியனும் வழங்கியது, அதே நேரத்தில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு RM 1 மில்லியன் ஒதுக்கப்பட்டது.


