NATIONAL

கிள்ளானில் உள்ள கார் உபரிபாக சேமிப்பு கிடங்கு தீயில் அழிந்தது

24 அக்டோபர் 2024, 2:13 AM
கிள்ளானில் உள்ள கார் உபரிபாக சேமிப்பு கிடங்கு தீயில் அழிந்தது

ஷா ஆலம், அக் 24- கிள்ளான், கம்போங் பாரு பண்டமாரான், லோரோங்

காப்பியில் உள்ள கார் உபரிபாக சேமிப்பு கிடங்கு தீவிபத்தில் 90

விழுக்காடு சேதமடைந்தது.

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட இத்தீவிபத்தில்

உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு

மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்

கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 12.35 மணியளவில் தகவல்

கிடைத்ததைத் தொடர்ந்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து

அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட குழு

இரு தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்

சொன்னார்.

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தீயணைப்பாளர்கள்

பிற்பகல் 2.00 மணியளவில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்

என்று குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.