NATIONAL

கரிம உரங்கள் பெறுவதற்கான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவது நல்ல ஒரு முயற்சியாகும்

23 அக்டோபர் 2024, 10:32 AM
கரிம உரங்கள் பெறுவதற்கான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவது நல்ல ஒரு முயற்சியாகும்

ஷா ஆலம், அக் 23: 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கரிம உரங்கள் உள்ளிட்ட உரங்களைப் பெறுவதற்கான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவது

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது.

விவசாயத்தில் சிலாங்கூர் மாநிலம் கரிம உரங்களைப் பயன்படுத்தப்படுகிறது என்றும், 2018 முதல் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களை

வழங்கவில்லை என்றும் விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷான் அசிம் கூறினார்.

கரிம உரங்களைப் பயன்படுத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏனெனில் அது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நீர் மாசுபாட்டின் அபாயத்தையும் குறைக்கிறது மற்றும் விவசாயிகள் நோய்களுக்கு ஆளாக மாட்டார்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம் நாட்டில் விவசாயம் இயற்கை உரங்களுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது, என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை

முன்வைத்த பிரதமர், நெல் பயிரிடும் பகுதிக்கு ஏற்ப இயற்கை உரங்கள் உள்ளிட்ட

உரங்களை திறந்த டெண்டர் மூலம் பெறுவதற்கான முன்னோடித் திட்டத்தை

அரசாங்கம் தொடங்கும் என்று தெரிவித்தார்.

சபா மற்றும் சரவாக்கில் உள்ள ஃபெல்க்ரா தோட்டத்தை விரிவுபடுத்துவதற்கு கூடுதலாக அரிசி தானியக் களஞ்சியங்களின் நீர் மற்றும் வடிகால்களை மேம்படுத்த

மொத்தம் RM65 மில்லியன் வழங்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.