NATIONAL

இந்திய மாணவர்களுக்கு அக்டோபர் 29அன்று இணைய வகுப்பு ஏற்பாடு அவசியம்

23 அக்டோபர் 2024, 10:27 AM
இந்திய மாணவர்களுக்கு அக்டோபர் 29அன்று இணைய வகுப்பு ஏற்பாடு அவசியம்

ஷா ஆலம், அக் 23: எதிர்வரும் வியாழக்கிழமை (31/10/24) கொண்டாடவிருக்கும்

தீபாவளியை முன்னிட்டு உயர்க்கல்வி கூடங்களில் பயிலும் இந்திய

மாணவர்களுக்கு அக்டோபர் 29 அன்று இணைய வகுப்பை நடத்த வேண்டும் என

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. .குணராஜ் உயர்க்கல்வி கூட

நிர்வாகத் துறையை கேட்டு கொண்டார்.

தொலைவில் இருக்கும் மாணவர்கள் தத்தம் இல்லங்களுக்கு திரும்ப போதிய

கால அவகாசம் தேவை. அக்டோபர் 29 வரை வகுப்புகளை நடத்துவதன் மூலம்

அம்மாணவர்கள் அலைச்சல் மற்றும் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்நோக்க

நேரிடும்.

இணைய வகுப்பை ஏற்பாடு செய்வதன் மூலம் கல்வியிலும் விடுபடாமல் அவர்கள்

தங்கள் குடும்பங்களோடு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட

முடியும் என்றார்.

ஆகவே, இதை அனைத்தும் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலனுக்காக உயர்க்கல்வி

கூட நிர்வாகத் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக அவர்

கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.