NATIONAL

பேராக் சுல்தான் தலைமையில் 267வது ஆட்சியாளர்கள் மாநாடு

23 அக்டோபர் 2024, 9:13 AM
பேராக் சுல்தான் தலைமையில் 267வது ஆட்சியாளர்கள் மாநாடு

கோலாலம்பூர், அக். 23 -  இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர்களின்  267வது மாநாட்டிற்கு  துணைப் பேரரசர் மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமை தாங்கினார்.

இந்த இரண்டு நாள் கூட்டத்தில் திரங்கானு சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின், சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சலேஹூடின் சுல்தான் பட்லிஷா, பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜூடின் துவாங்கு சைட் சிராஜூடின்  ஜமாலுல்லா,  நெகிரி செம்பிலான் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர்  ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஜோகூர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில், பகாங்  பட்டத்து இளவரசர் ஹஸானல் இப்ராஹிம் ஆலம் ஷா மற்றும் கிளந்தான் தெங்கு முகமது ஃபக்ரி பெட்ரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

பினாங்கு ஆளுநர் துன் அமாட்  புஸி அப்துல் ரசாக்,  மலாக்கா ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாம்,  சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் (சபா) மற்றும் சரவாக் ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாபர் ஆகியோரும் இம்மாநாட்டில்  பங்கேற்றனர்.

இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் முன் கவுன்சில் கூட்டத்தில்  மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார். ஆட்சியாளர்கள் மாநாடு ஆகக் கடைசியாக ஜூலை 17 அன்று துவாங்கு முஹ்ரிஸ் தலைமையில் நடைபெற்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.