NATIONAL

செல்ஹாக் 2024 6,000க்கும் மேற்பட்ட வருகையாளர்களை பதிவு செய்துள்ளது

23 அக்டோபர் 2024, 8:45 AM
செல்ஹாக் 2024 6,000க்கும் மேற்பட்ட வருகையாளர்களை பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், அக். 23: கடந்த வாரம் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற

சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு (செல்ஹாக்) 2024, நாடு முழுவதிலுமிருந்து

6,000க்கும் மேற்பட்ட வருகையாளர்களை பதிவு செய்தது.

இந்த ஆண்டு செல்ஹாக் அமைப்பு ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய அரபு

எமிரேட்ஸ், கொரியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் உறவுகளை

வலுப் படுத்தியது என்று ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் (HIS) பொது மேலாளர்

கூறினார்.

ஹலால் தொழிற்துறையில் சந்தை வாய்ப்புகளை விரிவு படுத்துவதுடன் எதிர்கால

கூட்டாண்மைகளுக்கு வழிவகுக்கும் ஒத்துழைப்புக்கு உதவுகிறது என முகமட்

சியாரில் ஷோகட் அலியின் தெரிவித்தார்.

ஹலால் சந்தை விரிவாக்கம் சவுதி அரேபியா, சீனா, அமெரிக்கா மற்றும் கனடா

போன்ற நாடுகளில் இருந்து முக்கிய சந்தை நிபுணர்களை வெற்றிகரமாக ஈர்த்தது.

இந்த அமர்வு, சந்தையை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோருக்கான

உத்திகள் மீது கவனம் செலுத்துகிறது, மேலும் ஒழுங்குமுறை இணக்கம், சந்தை

ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள் பற்றிய வழிகாட்டுதலை

வழங்குகிறது,  என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

செல்ஹாக் 2024, சான்றிதழ் தயார் நிலை மதிப்பீடு (CRA) முறையையும்

அறிமுகப்படுத்தியது, இது தொழில் முனைவோர் ஹலால் சான்றிதழ்

பெறுவதற்கான அவர்களின் தயார் நிலையை மதிப்பிடுவதற்கு உதவும் ஒரு முன்னோடி

கருவியாகும்.

சான்றிதழ் செயல்முறை சீரமைப்பதில், அனைத்து வகையான

வணிகங்களுக்கும் அணுக கூடியதாக மாற்றுவதிலும் CRA அமைப்பு முக்கிய பங்கு

வகிக்கிறது என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.