ஷா ஆலம், அக். 23- இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி கடந்த வாரம்
வெள்ளிக்கிழமை வரை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 3 கோடியே 10
லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்பிலான 1 கோடியே 38 லட்சம் லிட்டர்
மானிய விலை டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சின் இந்த ஓப் திரிஸ் 3.0 நடவடிக்கையின் போது 30,634
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு டீசல் மோசடி தொடர்பில் 1,561
வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ
அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
இதர அமலாக்கத் துறையினர் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கைளையும் சேர்த்து மொத்தம் 3.1 கோடி வெள்ளி ம்மதிப்புள்ள 1
கோடியே 38 லட்சம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர்
தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சட்டவிரோதப் பணப்
பரிவர்த்தனை மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் வழி பயங்கரவாத
நடவடிக்கைளுக்கு ஆதரவளிப்பு எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஆறு விசாரணை
அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் கேள்வி நேரத்தின்
போது அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கி நாடு முழுவதும்
தொடங்கப்பட்ட ஓப்ஸ். திரஸ் 3.0 நடவடிக்கையின் கீழ் கடந்த ஆகஸ்டு
மாதம் 5ஆம் தேதி வரை 7 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான
கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருள்கள் பறிமுதல்
செய்யப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம்
முன்னதாகக் கூறியிருந்தார்.


