NATIONAL

பள்ளி உள்கட்டமைப்பை சரிசெய்யவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு RM1.3 மில்லியன் ஒதுக்கீடு

23 அக்டோபர் 2024, 6:29 AM
பள்ளி உள்கட்டமைப்பை சரிசெய்யவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு RM1.3 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம்,அக் 23: பள்ளிகளின் உள்கட்டமைப்பை சரிசெய்யவும் பெற்றோர் மற்றும்  ஆசிரியர் சங்கங்களுக்கு உதவி புரியவும் RM1.3 மில்லியனை எம்பிஐ ஒதுக்கியது. இந்த உதவிகள் தேசிய பள்ளிகள், தேசிய இடைநிலைப் பள்ளிகள், சமயப் பள்ளிகள்

மற்றும் சீன, தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதாக எம்பிஐ தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க திட்டங்களுக்கு RM1.3 மில்லியன் ஒதுக்கீடு  செய்துள்ளோம்.

இந்த நன்கொடை பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நன்மை பயக்கும் செயல்பாடுகளால் மாணவர்களுக்கு உகந்த கல்விச் சூழலும் நல்ல

உள் கட்டமைப்பையும் பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர்  கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் முழுவதும் உள்ள 890 பள்ளிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்

சங்கங்களின் நிதிக்காக RM890,000 ஒதுக்கப்பட்டதாக அஹ்மட் அஸ்ரி தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நிதியை மாதாந்திர கடிதப் பரிமாற்றம், எழுது பொருட்கள் வாங்குதல்  மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.