NATIONAL

நிரந்தர வனப்பகுதி மற்றும் பராமரிப்பு சமூக வனப் பூங்காக்களில்   பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக முடக்கம்

23 அக்டோபர் 2024, 6:08 AM
நிரந்தர வனப்பகுதி மற்றும் பராமரிப்பு சமூக வனப் பூங்காக்களில்   பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக முடக்கம்

ஷா ஆலம்,அக் 23: நவம்பர் 15 முதல் ஜனவரி 2025 இறுதி வரை சிலாங்கூர் மாநில

வனவியல் துறை (ஜேபிஎன்எஸ்) தனது மேற்பார்வையின் கீழ் இருக்கும் நிரந்தர

வனப் பகுதி மற்றும்  பராமரிப்பு சமூக வனப் பூங்காக்களில்   உள்ள அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்)

பருவத்தைத் தொடர்ந்து வருவையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப் படவுள்ளது என்று சிலாங்கூர் மாநில

வனத்துறை இயக்குனர் அசார் அஹ்மட் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள  பராமரிப்பு சமூக வன  பூங்காக்களில் , ரிம்பா கபாய், குனோங் நுவாங், ரிம்பா காஞ்சிங், சுங்கை சோங்காக், சுங்கை செண்டட், சுங்கை தெகலா, சுங்கை

துவா, அம்பாங், கோமன்வெல், கோத்தா டாமன்சாரா மற்றும் டெம்ப்ளர் ஆகியவை

அடங்கும்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.