கோலாலம்பூர்,அக் 23: இன்று காலை நிலவரப்படி பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 78 குடும்பங்களைச் சேர்ந்த 286 பேர் நான்கு தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளனர்.
காலை 6 மணி வரை ஹிலிர் பேராக்கில் (59 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 216
பேர்),கிரியானில் (36 பேர், 11 குடும்பங்கள்) மற்றும் பேராக் தெங்காவில் (34 பேர், எட்டு
குடும்பங்கள்) பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (நட்மா)
தெரிவித்துள்ளது.
சிலாங்கூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு குடும்பங்களைச்
சேர்ந்த 25 பேராகக் குறைந்துள்ளது மற்றும் அவர்கள் கோலா சிலாங்கூர் மற்றும் சபாக்
பெர்ணம் மாவட்டங்களில் உள்ள இரண்டு பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டனர்.
– பெர்னாமா


