கோலாலம்பூர், அக். 23 - இங்கு நடைபெறும் “2024 மலேசியா பார்மா அண்ட்
ஹெர்த்கேர் எக்ஸ்போ“ எனப்படும் மருந்தக மற்றும் சுகாதார
கண்காட்சியில் மலேசிய-இந்திய வர்த்தக மன்றத்திற்கும் ஆசியான்-
இந்தியா வர்த்தக மன்றத்திற்கும் இடையே ஏற்படுத்தப்படும் கூட்டு,
மலேசியா, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையே மருத்துவத்
துறையில் அணுக்கமான ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை
ஏற்படுத்தும்.
அண்மைய ஆண்டுகளில் குறிப்பாகக் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப்
பின்னர் நாம் எதிர்நோக்கி வரும் சவால்கள் சுகாதாரத் துறை
கட்டமைப்பில் ஒத்துழைப்பு, புத்தாக்கம், புத்துயிரூட்டும் நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளன என்று துணை
சுகாதார அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சவுனி கூறினார்.
இன்று நாம், “அனைவருக்கும் சுகாதாரத்தை புதுமைப்படுத்துதல்“ எனும்
கருப்பொருளில் இங்கு கூடியுள்ளோம். இது முழுமையாக உள்ளடக்கிய
மற்றும் பதிலளிக்க கூடிய நமது கூட்டு எதிர்பார்ப்புகளை முழுமையாக
எதிரொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முக்கியமான தருணத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும்
ஆராய்ச்சி மேம்பாடுகள் மூலம் வழங்கப்படும் வாய்ப்புகளை நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாற்றத்தின் முன்னணியில் நமது
சுகாதாரத் துறைகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் ஆசியான் இடையிலான மருந்து மற்றும் மருத்துவ சாதன வர்த்தகம் கிட்டத்தட்ட 300 கோடி அமெரிக்க டாலரை (1,298 வெள்ளி) எட்டியது.
இந்த ஒத்துழைப்பு வெறும் புள்ளிவிபரங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. மாறாக, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், புத்தாக்க பகிர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. நாம் அனைவரின் பலத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆக்கத்தன்மைமிக்க சுகாதார சந்தையை வளர்க்க முடியும் என அவர் சொன்னார்.
இந்த மூன்று நாள் கண்காட்சியில் இந்தியாவின் மருத்துவச் துறை சேர்ந்த
30 கண்காட்சியாளர்களோடு மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய
நாடுகளின் பேராளர்களும் பங்கேற்றுள்ளனர்.


