கோத்தா பாரு, அக் 22 - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து,
RM7 மில்லியன் மதிப்புள்ள இல்லத்தரசிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (SKSSR)
பங்களிப்புக் கோரிக்கைகளை சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso)தீர்த்துள்ளது.
நிரந்தர ஊனம், ஓய்வூதியம், மருத்துவம் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களால் 906 பங்களிப்பாளர்கள் பயனடைந்துள்ளனர் என Socso Synergy
பிரிவு தலைவர் ரஹ்மட் இஸ்மாயில் கூறினார்.
“வீட்டு வேலை செய்யும் போது ஏற்படும் அசம்பவிதங்களுக்கு எதிராக இந்த விரிவான
பாதுகாப்பைப் பெற அதிகமான பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று
நாங்கள் நம்புகிறோம்.
RM300,00 வரை பாதுகாப்பு வழங்கும் இத்திட்டம்,இல்லத்தரசிகளுக்கு ஏற்படும்
விபத்துக்களின் விளைவை குறைக்கும் என சமூகப் பாதுகாப்பு அமைப்பு பங்களிப்பாளர் நிக் நசுரா செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிக் நசுரா என்ற ஆசிரியை, வீட்டு வேலை செய்யும் போது
தவறி விழுந்ததில் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கணவர்
செலுத்திய பங்களிப்பு மூலம் பயனடைந்தார்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 474,058 சமூகப் பாதுகாப்புத் திட்டப் பங்களிப்பாளர்கள் உள்ளனர். சரவாக்கில் 85,083 பேர், சபாவில் 84,571 பேர் மற்றும் கிளந்தானில் 56,416 பேர் உள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு மொத்தம் 500,000 பங்களிப்பாளர்களை அடைய இலக்கு
வைத்துள்ளோம், என்று அவர் கூறினார்.
- பெர்னாமா