NATIONAL

பேராக் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் நிலைமை சீராகி வருகிறது

22 அக்டோபர் 2024, 4:47 AM
பேராக் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் நிலைமை சீராகி வருகிறது

கோலாலம்பூர்,அக் 22: பேராக் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் நிலைமை சீராகி வருகிறது.

நேற்று பிற்பகல் 9 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆகக்

குறைந்துள்ளது.

பேராக்கில் மொத்தம் 102 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் இன்னும் ஹிலிர் பேராக், பேராக் தெங்கா மற்றும் கிரியான் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஐந்து தற்காலிக தங்கும் மையங்களில் (PPS) தஞ்சமடைந்துள்ளனர் என பேரிடர் சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில், சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 111 பேர் மூன்று தற்காலிக தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சரவாக்கில் மருடி நிலையம் மற்றும் சுங்கை டவுசன் ஆகிய இரண்டு ஆறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக Public Infobanjir இணையதளம் தெரிவித்துள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.