NATIONAL

பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையக மேம்பாடு அவசியம்

22 அக்டோபர் 2024, 3:16 AM
பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க பெட்டாலிங் ஜெயா காவல்துறை  தலைமையக மேம்பாடு அவசியம்

ஷா ஆலம், அக். 22: பெட்டாலிங் ஜெயாவில் காவல்துறையின் புதிய தலைமையக (IPD)

கட்டத்திற்கு  2025 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கபட்டிருப்பது, நகரத்தின் அந்தஸ்துக்கு ஏற்ப

சரியான முடிவாகும்.

இக்கட்டுமானமானது பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டை பலப்படுத்துவதோடு

சமூகத்திற்கான சேவையின் தரத்தை மேம்படுத்தும் என சிலாங்கூர் காவல்துறைத்

தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் காவல்துறை தலைமையகத்தை  மறு நிர்மாணிப்பு திட்டம் நீண்ட

காலமாக தாமதமாகி வருவதால், 2025 பட்ஜெட்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

இப்ராஹிம் அத்திட்டத்திற்கு காட்டிய அக்கறையை நான் பாராட்டுகிறேன்.

பெட்டாலிங் ஜெயா ஒரு மாநகரத்தின் அந்தஸ்தை அடைந்து விட்டதைக் கருத்தில்

கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பராமரிக்கும் முயற்சியில் புதிய காவல்

நிலையம் கட்டுவது மிகவும் அவசியம்  என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் காவல்துறையினரும் 2023 ஆம் ஆண்டு உள்துறை

அமைச்சகத்தின் மடாணி ஒதுக்கீட்டின் மூலம் காவல்துறை குடியிருப்புகளை

பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் RM6.7 மில்லியன் நிதியைப் பெற்றதாகவும்

ஹுசைன் தெரிவித்தார்.

பட்ஜெட் 2025 ஐ சமர்ப்பித்தபோது,பகாங், வாங்சா மஜு, பெட்டாலிங் ஜெயா

காவல்துறை தலைமையங்கள் மற்றும் மலாக்காவில் தஞ்சோங் மின்யாக் காவல்

நிலையம் ஆகியவை RM2.1 பில்லியன் செலவில் கட்டப்படும் என்று பிரதமர்

அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.