ஷா ஆலம், அக்.21: 20 சென்ட் பிளாஸ்டிக் பைக் கட்டணத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட RM 20 மில்லியனுக்கும் அதிகமான தொகை, சுற்றுச் சூழலின் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், மறுசுழற்சித் திட்டங்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்படும்.
நிலையான மற்றும் பசுமை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் விவரங்கள் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அறிவிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"2009, 2010 இல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்கியது. அது தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் RM20 மில்லியன் வசூலிக்கப்பட்டது.
"சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை பராமரிக்க மறுசுழற்சி திட்டத்தை தொடங்க இந்த வசூல் தொகை பயன்படுத்தப்படும். 2030ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கையை அமல்படுத்தப்படும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டத்ததின் மூலம் 2020 ஆண்டு முதல் கடந்தாண்டு வரை RM 38 மில்லியன் வசூலிக்கப்பட்டது என சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் பணம், சுற்றுச்சூழலை நேசிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நிலையான திட்டங்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.


