NATIONAL

ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவை அரசாங்கம் அதிகரிக்கவில்லை

21 அக்டோபர் 2024, 6:57 AM
ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவை அரசாங்கம் அதிகரிக்கவில்லை

கோலாலம்பூர், அக் 21 - சுகாதார அமைச்சின் வசதிகளில் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவை அரசாங்கம் ஒருபோதும் அதிகரிக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

ஓர் அமர்வுக்கு RM13 அல்லது பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை வழங்கப்படும் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்காக மாதத்திற்கு RM 169 கட்டணம், 2016 முதல் மாறாமல் உள்ளது.

கூடுதலாக,சுகாதார அமைச்சின் வசதிகளில் அடிப்படை சேவைகளுக்கான செலவு இன்னும் RM 1 ஆக உள்ளது, அதே சமயம் சிறப்பு சேவைக்கு RM5 ஆகும்.

“மலேசியா ‘கட்டண சுகாதார சேவைகளை’ நோக்கி நகர்கிறது எனும் கருத்து தொடர்ந்து நிலவி வருகிறது. அரசாங்கம், குறிப்பாக மலேசியா மடாணி நிர்வாகத்தின் கீழ், சுகாதார சேவைகள் அல்லது #UniversalHealthcareக்கான திறந்த அணுகலைப் பேணுவதற்கான அதன் உறுதிப்பாட்டை பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டும்.

"ஒற்றுமை அரசாங்கம் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவை ஒருபோதும் அதிகரிக்கவில்லை மற்றும் இந்த நேரத்தில் எந்த கட்டணத்தையும் மறுபரிசீலனை செய்யும் திட்டமும் இல்லை," என டாக்டர் சூல்கேப்ளி கூறினார். இது போன்ற தவறான மற்றும் பொறுப்பற்ற செய்திகள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்றார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.