கோலாலம்பூர், அக் 21: இன்று காலை 9.30 மணி நிலவரப்படி மூன்று மாநிலங்களில் உள்ள 11 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 670 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பேராக்கில், ஹிலிர் பேராக், பேராக் தெங்கா மற்றும் கிரியான் ஆகிய மூன்று மாவட்டங்களில் 118 குடும்பங்களைச் சேர்ந்த 409 பாதிக்கப்பட்டவர்கள் ஆறு பிபிஎஸ் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் சமூக நலத் துறை (ஜேகேஎம்) தெரிவித்தது.
சிலாங்கூரில், 57 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் நான்கு பிபிஎஸ்களில் தஞ்சமடைந்தனர், கெடாவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் பண்டார்பாருவில் உள்ள ஒரு பிபிஎஸ் களில் உள்ளனர்.
– பெர்னாமா


